மாலை ! பூக்கள் விடும் கண்ணீரால் பிறந்தவை
--------------------------------------------------------------------
பல மலர்களின் வழ்வுரிமை மறுக்கப்பட்டு,
அவை கொய்யப்பட்டு,
ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டு,
அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியப்பட்டு,
இதோ அழகான மாலையினை
அமரிக்கா பின்னிக்கொண்டிருக்கிறது!!!
.
--------------------------------------------------------------------
பல மலர்களின் வழ்வுரிமை மறுக்கப்பட்டு,
அவை கொய்யப்பட்டு,
ஒருமைப்பாடு சிதைக்கப்பட்டு,
அங்கொன்றும் இங்கொன்றுமாக முடியப்பட்டு,
இதோ அழகான மாலையினை
அமரிக்கா பின்னிக்கொண்டிருக்கிறது!!!
.
ஆச்சரியப்படாதீர்கள்
எங்களின் குரல்கள்
மாலையில் இருக்கும் பூக்களைப்போன்றவை,
எங்களின் உரிமை
அவர்களால் பின்னப்படும் அழகான மாலைக்குள்
பல இடங்களில்,
அங்கொன்றும் இங்கொண்றுமாக
.
பேசாத பூக்களை, பேசாதே என சொல்லத் தேவையில்லை,
விரும்பியபடி கொய்யப்படுகிறோம்
ஏனெனில் அவர்களின் அழகுக்காகவே
நாங்கள் வாழ்கிறோம்.
எங்களின் குரல்கள்
மாலையில் இருக்கும் பூக்களைப்போன்றவை,
எங்களின் உரிமை
அவர்களால் பின்னப்படும் அழகான மாலைக்குள்
பல இடங்களில்,
அங்கொன்றும் இங்கொண்றுமாக
.
பேசாத பூக்களை, பேசாதே என சொல்லத் தேவையில்லை,
விரும்பியபடி கொய்யப்படுகிறோம்
ஏனெனில் அவர்களின் அழகுக்காகவே
நாங்கள் வாழ்கிறோம்.
கே தர்ஷன்