செவ்வாய், 9 ஜனவரி, 2018

காலை விடியுதே !!!



கொக்கரோ கூ...என சேவல் கூவுதே..!
துஞ்யிடும் மழலையாள் குயிலும் கூவுதே..!
கத்தரி தோட்ட ஆட் காட்டி கத்துதே!
காகங்கள் மகிழ்வாய் கதைகள் பேசுதே!

தொட்டிலில் பிள்ளையோ அலட்டிக் கேட்குதே!
தகப்பனையும் அது எழுப்பி விடுகுதே!
தாயையும் பிள்ளை அம்மாவெங்குதே !-தமிழ்
தரணியை தாவியே காலை விடியுதே!
காலை விடியுதே ! தமிழ்க் காலை விடியுதே!