ஞாயிறு, 7 ஜனவரி, 2018

காதலித்தால்!??

கற்பனையில் மிதப்பாய்
கலர் கலராய் கனவு காண்பாய்-உன்
வீட்டில் நீ இருப்பதே உனக்குத் தெரியாது
அவள் தான் நீ என்பாய் நீ தான் அவள் என்பாள்

காற்றைக் கூட அவள் சுவாசித்த காற்றா?-என
முகர்ந்து பார்ப்பாய்
முகர்ந்து பிடிக்கும் நாய் கூட உன்னை விஞ்சாது - அவளின்
ஒவ்வொரு அசைவுமே பெரும் தத்துவமாக காண்பாய்-அவளை
சிறைப்படுத்தி கூட ரசிப்பாய்
யாருடனும் பேச அனுமதிக்காய்

உன் வீட்டில்
பொய்யை தவிர எதையும் சொல்லமாட்டாய்
அப்பா உதைத்தாலும் அம்மா திட்டினாலும்
அவளுக்காக என நினைத்து சந்தோசப்படுவாய்!

பாடலே பாடாத உன் வாய்க்குள்ளும்
சில பாடல்கள் முனுமுனுக்கும்
அம்மா உணவு தரும்போது
அம்மாவை அவளாய் காண்பாய்!

ஏதோ அதிஸ்டம் உனை தேடி வருகிறதாக ஏங்குவாய்
பிறக்காத உன்  பிள்ளையின் பெயரை
அவள் சொல்ல- நீ சரி பார்ப்பாய்
சண்டையிட்டு பெயர் சொல்வீர்கள் !

முதல் பிள்ளை என்ன என
 பாலைக்கூட ஆணா ? பெண்ணா? என தெரிவீர்கள்-ஆனால்
உங்கள் வீட்டில் நீங்கள் வயதுக்கு வந்தாலும்
சிறுவர்களே!

உன் கக்கூசு நேரமும் அவளுக்குத் தெரியும்-அப்படி
அந்தரங்கமற்ற சுகம் தெரியும்-அதிகாலை அவள்
பல் தீட்டினாளோ இல்லையோ -போனில்
அமத்தி அப்படியொரு முத்தம் கேட்பாய்
கிடைத்தவுடன் நீ  பல்விளக்குவாய்
கிருமி கூட கிடுகிடுப்பாய் காதல் செய்யும்
யோக போகமென்பாய்!

உனக்குள் நீ சிரித்துக்கொள்வாய்
உன் உடையுடன் -அணிய முன்னர்
நீயே பேசிக்கொள்வாய்
போய்விட்டு வருகிறேன் என சொல்ல -உனக்கு
யாருண்டு என சிந்திக்க தோன்றும்!

அடுத்த பிறப்பை இப்போதே காணும் ஞானம் பிறக்கும்
இன்னொரு பிறவியல்ல
 எல்லாப் பிறவியுமே அவள் தான்  வேணுமென்பாய்
பல செல்லப்பெயர்கள் சொல்வாய் -எல்லாமே
உயிர்பெற்றுக்கொள்ளும்


சிந்தனையை அவளை தவிர எங்கேயும் சிதறவிடாய்
படிப்பை கூட அவளுகாய் படிப்பய்
காலம் வரும் வரை காத்திருப்போமென்பாய்-ஆனால்
கள்ளத்தனமாக கற்ப்பை பதம் பார்க்க எண்ணுவாய்

முடிந்துதோ முடியலையோ காலவோட்டத்தில்
இரகசியமாகவேனும் கற்ப்பை பதம் பார்ப்பாய்-அப்போது புரிவாய்
அதிசயம் இவள் தானென
அது எதுவோ - காதல்
கலியாணத்தில் முடியட்டுமே!


சொல்லவில்லை ஆனால் காதலித்தேன்!

ஆற்று மணல்கரை அருகிலொரு குடிசை 
வேற்றுக்கிரக வாசியில்லை அவள்!
வெங்கடேசின் மகள்
மாற்று மதமுடையாள் இன்ப இதழுடையாள்
சாற்று மாதுளையில் தனிரகமென்றெண்ணி

கேற்று வாயிலில் - நின்று 
மணிக்கணக்கில் பாத்திருக்கேன்
கோலமிட்டு மெழுகி கோவில் செல்லும் வரை 
பல்துலக்காமலே பச்சோந்தியாய் பசித்திருந்தேன் - ஆனாலும்
சொல்லவில்லை காதலை!

அயல்வீடுகளெல்லாம் அடுக்கடுகாய் ஆண்கள் -குடிகாரன் என்னப்பன்
எனக்கெங்கே கனவுக் கன்னி -அதனாலோ என்னவோ
சொல்ல வெட்கத்தில் சொல்லாமலே தவித்தேன்
சொல்லாத காதலிது செல்லாததென நினைதேன்!

படிப்பில் நான் கெட்டி என்றாலும்- என்கம்மல்
நடிப்பழகியிவள் சிரிப்பொலியில் சிதைந்துவிடும்
செடிகொடிகள் சிலதை சுரண்டி -வடு வைப்பத தவிர
வேறு வழியில்லை எனக்கு-சொல்லாத காதலிது

பல்கலையில் கூட கொடிகட்டிப் பறந்தேன்
ஒருகலையும் செல்லாத இவள்கலையில் மயங்கி
தறுதலையாக கூட வாழ்ந்து பார்த்தேன் - முடியவில்லை
சொல்லாத காதலிது

படர்கொடியொன்று என்னெழுத்தை தாங்கி -அவள் வீட்டில் 
தொடர் கொடியாய் சென்றது -அப்போது கேட்டாள் அவள்
இலையில் வரையும் உங்கள் காதலை - என் 
இதையத்தில் வரையலாமே யென

 சொல்லிவிட்ட - என் 
சொல்லாத காதலிது
செடிக்கு கூட இரக்கம் என்னில் உண்டு-என்ன இந்த
கொடிக்கு கூடவா வராமல் போகும்.!!!?







அவளின்றி சில நாள்

சத்தியமாய் ஏதோ சனியன் பிடித்துட்டு
புத்தியோ பொறுமையோ - எல்லாம் ஏமாற்றுகிறது
வைத்தியத்திற்காகவே நோய் வருகிறது-காதலியே!!
நீ பிரிந்த இன்நாளில்

சோறு வெறுக்கிறது சோகம் உதைக்கிறது
மாறுவேடம் பூண்டே சந்தியில் உலவுகிறேன்..இப்போ
சந்தி சிரிக்கிறது சாமியார் என்கிறது
முந்தி எனை முன்மாதிரியாய் பார்த
தந்தி கொடு தபால் காரனோ
கதவை தட்டவில்லை

வாழ்க்கை வெறுக்கிறது வருங்காலம் தேய்கிறது
காக்கை குருவி கூட கடைக்கண்ணால் பார்கிறது
தேக்க நிலையை என் தோளில் சுமத்தி வைக்கும்
தூக்க மத்திரையே உன்பிரிவு தோழீ



மகிழ்ந்துகொள் அதனால் காதல்

நீ பூவை பார்த்து
 இப்படி சொல்வாயென நினைக்கவில்லை! ஆச்சரியம்
வண்டு கோபப்பட்டால் கொட்டிவிடும்


என்னவளே தேன் பூவில் மட்டுமா உண்டு??-மன்னித்துகொள்
வண்டு உன்னை முத்தங்கொடுக்க நினைக்கிறது உனக்கு
நீ ஒரு பூ-அதுவும் ரோஜாப்பூ


நான் கவனமாக பார்க்கின்றேன் வண்டை-அதோ பார்
உன்னை தொலைவில் கண்டுவிட்டே இப்படி ரீங்காரம் 
எனக்குத்தெரியாத ஒன்றையா நீ வைத்திருக்கிறாய்
சொல் பெண்ணே சொல்-அது என்ன


முத்தத்தில் நனையும்முன்பே உன் முந்தானை
எனை வருடியதே -அதுவா?
அதற்கு மேலும் உள்ளதுவே 
அத்துமீறாமல் நீ பார்த்துக்கொள்வாயே அதுவா?


எதுவோ !
நீ மகிழ நான் நான் மகிழ நீ
அதனால் ஒரு குழந்தை அம்சமாகுமென்கிறேன் 
மகிழ்ந்த்துகொள் என்னவளே!




சிலுவை வலி வேண்டுமா? காதலி

காதலித்துப்பார்
நீ அறியமாட்டாய் - ஆனால்
பலமுறை மனசால் சிலுவையில் அறையப்படுவாய்
தற்கொலைக்கு எண்ணுவாய் - ஆனால் செய்யமாட்டாய்
தோல்வியை தாங்கவா அல்லது தோற்க்காமல் இருக்கவா?


இரண்டு நிலை வரும்
எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்
இரண்டுமே துன்பம் தான்!
காத்துக்கிடக்க ஆசைப்படுவாய்- ஆனால்

அப்போது தான் வாய்ப்புக்கள் வந்து குவியும்
கிட்டத்தட்ட நீ மன நோயளி ஆக்கப்படுவாய்
மறதியால் அவதிப்படுவாய் மற்றோரை வெறுப்பாய்


தனிமை உனக்கு தீனிபோடும்
சிந்த்தித்தே காலம் போக்க நினைப்பாய்-ஆனல்
இடக்கிடை திடுக்கிடும் முடிவுகள் வரும்
புலம்புவாய் எதிலுமே இறங்கமாட்டாய்

இதோ
இறுதிக்கட்டம் நெருங்கும்
ஊரே உன்னை கேலிசெய்வதாய் உணர்வாய்-அப்போது
காலமோ புரண்டோடியிருக்கும்-நீ
யாரை நினைத்து உருகினாயோ -அது
உன்முன்னே சௌக்கியமாய் குழந்தையுடன் போகும்


இதற்க்குப் பின் ஓர் ஞானம் பிறக்கும்
எவனோ! யாரோ !கட்டுவோம் கலியானமென


அங்கே பார்
அந்த சூரியன் என்றும் அப்படித்தான்
உதிக்கிறது மறைகிறது
ஆனால்
மனமோ உதித்த காதலை
மறைக்க மறுத்து
மறைந்து வாழ்ந்தே வாழ்வை தொலைக்கும்-அது
உன் சந்ததி பேரப்பிள்ளை கண்டால் கூட


என்ன சௌக்கியமா
சிலுவை வலி மற்றயவர்களுக்காக தான் சுமக்கப்பட்டது
சுமந்துகொள் உன் காதலனுக்காக நீ.