சனி, 13 ஜனவரி, 2018

அழகுதமிழ் பொங்கல்!!!





பொங்கி வழியும் பாலே -இப்
பூமிப்பந்தில் அங்கங் கொடு தமிழர்க்கு-அது
நாடாய் அமையட்டும்!!
சுட்டெரிக்கும் கண்ணுடயானே
பட்டப்பகலிலெல்லா திருடரிங்கு- எங்கே
வேலையை காட்டு
தமிழன் பொங்கினான் நன்றி தெரிவித்தான் என
நாழிகை கழிக்காதே!!!
இங்கு தானுள்ளோம் இதோ ஈழம்
தனியாய் தா எமக்கு!

இனிய தமிழ் பொங்கல்


பொங்குகிறோம் தமிழை
புகழ்கிறோம் தமிழழகை
நவில்கிறோம் நன்றியை
சூரிய தேவா நீ சூனியம் அழித்த தேவா!
ஆரியமில்லை இது ! தமிழ்!!!

அடங்கமாட்டோம் அதட்டலுக்கு!
வீரங்கொண்ண்ட  இவ்வுலகின் மூத்த குடி
நீயும் திமிர்கொல் எம்மால்- இதோ
எத்தனை தடவை வேண்டுமானாலும் வைத்துகொள்
நன்றி நன்றி நன்றி
முடிவற்ற தமிழனின் வார்த்தை!! பெற்றுக்கொள்!
எம்மவர் நன்றியை...

பொங்கல் கவிதை

தையே வருக!
தவிப்பெலாம் போக்குக!
களைபிடுங்கி எமை-நல்
நிலை யாக்குக.
அனைவருக்கும் இனிய தமிழ் பொங்கல் வாழ்த்துக்கள்

உங்களுக்கு பிடித்த பொங்கல் எது? ஏன.ஒர் இலக்க த்தை தெரிவு செய்து காரணத்தை எழுட்




விவசாய வாழ்க்கை ஓஹோ!!!

வேலிக்கரையோரம் வெறும் பாத்திரம் தேய்க்கையிலே
ஓரக் குடில்பக்கம் அப்பத்தா ஓலைக்குட்டான் செய்ய
பூனை அருகிருந்து ஓர் முருங்கை அணில் பார்த்து
நாய் துரத்தவொண்ணா கடு கதியில் சென்று கவ்வ


சோலை கரம் தடவும் தமிழ் தென்றல் காற்றினிக்க
காலைக்கடன்கழிக்க பெருசு ஒதுக்கை பக்கம் சென்று
கூழாங்கல்லிருக்கும் குளத்தின் அந்தப்பக்கம்
வாரி அடித்து தண்ணீர் உள்ள வடுக்கையடிக்கழுவி
காறி உமிழ்ந்து துப்பி அந்தக் கழிப்பின் பின் மகிழ்ந்து


பாதி வழி வந்து யாண் வேப்பங்குச்சி கொய்து
பாடுபார்த்து கடித்துப் பல் துலக்கி பின்
மாட்டு சாணமள்ளி அதற்க்குத் தீனி போட்டு
பாட்டுப்படி வந்து பழஞ்சோற்றுக் கஞ்சி மென்று

நாட்டுடை கலப்பைகொண்டு நாணைல்புல் வயல் கடந்த்து
மாட்டுடன் வீறுபோட்டு உழுவயல் சென்றுழுது
மடியில் வெற்றிலையை போயிலையுடன் சேர்த்துப்போட்டு-அந்த
நமைச்சலில் சளியை காரித்துப்பி


ஏரை பிடித்து பதமாய் மெல்ழுலுது
மதியக்கணக்கில் மனமொத்து கழைப்பாற
மனுசி கொண்டுவந்த கத்தரிக்காய் மாசிக்கறி
வாயைக் கொப்புளித்து கமகமக்க வயிறுண்டு

பூவரச மரத்துஅடியில் சின்னத்தூக்கம் போட்டு
மறுகுழுக மீண்டும் மோர்முறை வெற்றிலை போட்டு
மாலை வருங்கணக்காய் வயலை வளமாக்கி
வாழும் எம் வாழ்க்கைதான் விவசாய வாழ்க்கை ஓகோ!!