வேலிக்கரையோரம் வெறும் பாத்திரம் தேய்க்கையிலே
ஓரக் குடில்பக்கம் அப்பத்தா ஓலைக்குட்டான் செய்ய
பூனை அருகிருந்து ஓர் முருங்கை அணில் பார்த்து
நாய் துரத்தவொண்ணா கடு கதியில் சென்று கவ்வ
சோலை கரம் தடவும் தமிழ் தென்றல் காற்றினிக்க
காலைக்கடன்கழிக்க பெருசு ஒதுக்கை பக்கம் சென்று
கூழாங்கல்லிருக்கும் குளத்தின் அந்தப்பக்கம்
வாரி அடித்து தண்ணீர் உள்ள வடுக்கையடிக்கழுவி
காறி உமிழ்ந்து துப்பி அந்தக் கழிப்பின் பின் மகிழ்ந்து
பாதி வழி வந்து யாண் வேப்பங்குச்சி கொய்து
பாடுபார்த்து கடித்துப் பல் துலக்கி பின்
மாட்டு சாணமள்ளி அதற்க்குத் தீனி போட்டு
பாட்டுப்படி வந்து பழஞ்சோற்றுக் கஞ்சி மென்று
நாட்டுடை கலப்பைகொண்டு நாணைல்புல் வயல் கடந்த்து
மாட்டுடன் வீறுபோட்டு உழுவயல் சென்றுழுது
மடியில் வெற்றிலையை போயிலையுடன் சேர்த்துப்போட்டு-அந்த
நமைச்சலில் சளியை காரித்துப்பி
ஏரை பிடித்து பதமாய் மெல்ழுலுது
மதியக்கணக்கில் மனமொத்து கழைப்பாற
மனுசி கொண்டுவந்த கத்தரிக்காய் மாசிக்கறி
வாயைக் கொப்புளித்து கமகமக்க வயிறுண்டு
பூவரச மரத்துஅடியில் சின்னத்தூக்கம் போட்டு
மறுகுழுக மீண்டும் மோர்முறை வெற்றிலை போட்டு
மாலை வருங்கணக்காய் வயலை வளமாக்கி
வாழும் எம் வாழ்க்கைதான் விவசாய வாழ்க்கை ஓகோ!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக