காற்று என்றால் விஞ்ஞானத்துக்கு வகை தெரியும்
காதல் வந்தால் காற்றிற்கு மொழிபுரியும் -ஆதலால்
காற்றே வா ..விஞ்ஞானமே போ
நாம் கதலிக்கும் மனிதர்கள்
அனைத்தும் அறியும்காற்றே உனை நம்பி
என்னுயிரே இயங்கும்போது
இதற்க்குமேல் எனக்கேன் கைபேசி சேதி சொல்ல??
போ ..என் கதலியிடம் கேட்டு வா
அவள் உயிரை என்னிடம் அழுத்தி
எனக்குள் அவளை உறையவை
நித்திரைக்குள்ளும் பேசச்சொல்
நானும் அப்படியே செய்கிறேன்
காற்றின் பதில்
நண்பனே!
போனேன் சொன்னேன் செய்தேன்
உன் காதலியை நான் தொடுவது குற்றமாச்சே!! அதனால்
உன் அன்பின் ஆழம் கருதி
அவளைப்பார்த்தேன்,அருகில் சென்றேன்
அவள் சுவாசிக்கும் படி உள்ளே நான் செல்லவில்லை-அதனால்
மரணித்துவிட்டால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக