வெள்ளி, 27 ஏப்ரல், 2018

நிர்வாணக் காதல்!!!




















காற்றுக்குள் புகுந்து களவாக கண்சிமிட்டி
நாற்றமெடுக்குமிடமெல்லாம் நறுமணம் வீசி
கூட்டத்துக்குள் உனைக்கண்டு
கூச்சமடந்து
மூச்சு முட்ட முட்ட -தந்த
முத்தம்!
ஆஹா..ஓஹோ

ஏந்திக்கொள் என நீ பொழிய
வாங்குகிறேன்னென நான் மகிழ-மொத்தத்திலெம்
பித்தம் பிதிதிர் தீர்த்ததுவே-அங்கே
மொட்டு மழழைக்கு ஓர் அரும்பு நாட்டினாயே!!

களவாணிப்பையா!!!
வானத்திலுள்ள கருங்குகைக்கு-பல
கற்பனைகள் வடிக்கும் விஞ்ஞானமே -இங்கே
படித்துக்கொள்!
இதற்கு அர்த்தமும்
அதற்கு மொழியும் ஒன்றென்றாய்

ஞானம் பிறக்குமிடம் பெண்ணுக்குள் ஆண்
ஞானம் விளங்குமிடம் ஆணுக்குள் பெண்
இயற்கை மூளை சலவை செய்த மனிதமே
காதல் மூலை சலவை செய்த இயற்க்கையே
கவிழ்ந்து நின்றுபார்
எல்லாம் முக்காலே
நிர்வாணம் அங்கலாய்த்து
அங்கே தெரியும்!!!

கருத்துகள் இல்லை: