சனி, 6 ஜனவரி, 2018

காதலின் பிரிவால் காதலி

எனக்கென நினைத்தேன் வாழ்க்கையை தொலைத்தேன்
பழகிய காலம் -பாழாகிப்போனதே
என்னுறவே!
 உன் இனிமையான முற்கோபம் -என்னை
 சாறாக பிழிந்த அன்பின் ரூபம்
தாங்குகிறேன் உன்னை என விடுதியில் கூட-உன்
தோளில் சுமந்து காட்டினாயே !!
அதையுமா மறந்தாய் இப்போ?



என் மூக்கை உன் முக்கில் வைத்து
சுவாசித்துக் காட்டினாயே!!
உதட்டை விடியும் வரை ஒட்டியிருப்போம் என
நடுநிசியில் தூங்கினாயே
நான் குழந்தை என்றேன்
அதுவுமா ஞாபகமில்லை??





களவாணிக்காதலாச்சே கற்புக்கு நீ சொன்ன
அர்த்தங்கள் எங்கே-எனை ஏமாற்றவா
விடுதிக்கு விடுதி விடுமுறை போட்டய்??-இதோ உன்
ஆத்துமாவிற்க்குள் பல நிலையில் புதைந்தேன்-நீயும் என்
ஆத்துமாவிற்க்குள் புதைந்திருக்கின்றாய்
பேயாகிக்கூட உன்னுடனே வாழ்வேன்
மறக்காதெ !
துரத்தி வருவேன் உனை-எங்கே
வாழ்ந்து காட்டு பார்க்கிறேன்







கசக்காத காதல் நதிக்கே நதி!

💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💋💋💋💋💋💋💋💋
கனிக்குள் இனிப்புமுண்டு அமிர்தமும் உண்டு
காதலில் இனிமைக்குள் ஓர் அமிர்தமிண்டு
மனங்கள் கலக்கும் அதிநொடியே
உனக்கென்ன மாத்திரை??
கசக்காமல் காதல் செய்யும் நொடியே
நீயும் காலத்திற்குள் உள்ளடகமா?
ஓ நதியே நீ கூட நீர் வற்றினால் ஓய்ந்துவிடுவாய்
நாம் காதலிக்கிறோம் -இல்லை
நதியையே கேட்கிறோம்
எம் காதலின் வற்றாத நிலையா?
வற்றிப்போகும் உன் நீர் ஓட்டமா?
வா போட்டிக்கு
காதல் கசக்காது சலிக்காது
ஓடும் நதியல்ல!
நதிக்கு பாடம் கற்பிக்கும்
நதிக்கே நதி!
💝💝💝💝💝💝💝💝💝💝💝💘💘💘💘💘💘💘💘💘💘💘💗💗💗💗💗

காற்றுவிடு காதல் தூது

காற்று என்றால் விஞ்ஞானத்துக்கு வகை தெரியும்
காதல் வந்தால் காற்றிற்கு மொழிபுரியும் -ஆதலால்
காற்றே வா ..விஞ்ஞானமே போ
நாம் கதலிக்கும் மனிதர்கள்

அனைத்தும் அறியும்காற்றே உனை நம்பி
என்னுயிரே இயங்கும்போது
இதற்க்குமேல் எனக்கேன் கைபேசி சேதி சொல்ல??

போ ..என் கதலியிடம் கேட்டு வா
அவள் உயிரை என்னிடம் அழுத்தி
எனக்குள் அவளை உறையவை
நித்திரைக்குள்ளும் பேசச்சொல்
நானும் அப்படியே செய்கிறேன்

காற்றின் பதில்
நண்பனே!
போனேன் சொன்னேன் செய்தேன்
உன் காதலியை நான் தொடுவது குற்றமாச்சே!! அதனால்
உன் அன்பின் ஆழம் கருதி
அவளைப்பார்த்தேன்,அருகில் சென்றேன்
அவள் சுவாசிக்கும் படி உள்ளே நான் செல்லவில்லை-அதனால்
மரணித்துவிட்டால்.


சிவப்பு நிறத்தழகி

சிவப்பு நிறத்தழகி சிந்தை குறத்தழகி
பசப்பு வார்த்தக்கெலாம் பசப்பாக போற பெண்ணே!
கசக்க முசக்கவென கடுகுக் காரம் கொண்ட
லடக்க ழுடக்கவுக்கு வயக்காடு வாடி புள்ளே

அடியே..
சொர்க்க திறப்பையெடு ..சொல்லாலே மயக்கங்கொடு
பக்கத்துல யாரும் படுபாவி இல்லபுள்ளே
விக்க விக்க -நீ விண்னை முட்டும் மின்பம்
தக்க நேரம் புளே தவிக்க வைகாதே

போங்க--
அந்தாப் புரத்துக்கு சொந்த காரனில்ல
ஆத்தாக் கடந்த்திட்டா ஆலோல மாலோலம்!!
பொட்டா பிள்ளபிடிச்சு பொண்டாட்டி தவிக்கவிட
மிச்சம் திமிருக்கா வாருங்கா
 இல்லா மீதி திமிரடக்க வாருங்கா!

புள்ளே..
மிச்சா திமிருருக்கு மீதி திமிருருக்கு
மொத்தமுன்கிட்ட பாக்குரேன்-அடி மோதீ
நீயென்னை மழுக்கடி யென்னை மழுக்கடீ
தெட்ட தெவிட்டலுக்க தள்ளடீ -நான்
தெவிட்டிட இன்பம் காட்டடி









காதல் தோற்றாலே காதலர்கள் வெல்வார்கள்!

பிடுங்கப்படுகின்ற பழங்களுக்குள்
மரமாகும் விதைகளுண்டு!
காதலும் அப்படித்தான்
காதலும் கனிந்த பின்னர் பிடுங்கப்பட வேண்டும்
அப்போது தான் அது முழைவிட்டு மரமாகும்!

இல்லையெனில் காதல்வாழாது
கல்யாணத்தில் முடிந்த காதல்களில்
காதலின் ஏக்கம் இல்லை
காதலர்களின் ஏக்கமும் இல்லை!


தேனிலவு

கண்ணில் சிறு துளி நீரால்
 எனை நனைத்தே பார்த்தால்!
களவாகக் கழிக்கிறோம் தேனிலவை-ஆனால்
நீ என் நிரந்தரக் கணவன் தானேயென- ஆனால்
 நான் கிறுக்கன்

அவள் முத்தம்

என் வாழ்க்கையில் எதையாவது
 மறக்கவேண்டுமெனில்
அவள் முத்தத்தில் நனைந்த சிந்தனை
அது ஒன்றே போதும்!
மரண வீடு கூட மங்களமாய் தெரியும்.


காதல் முறிய வெளிநாட்டு மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளை
வெள்ளையாய் மிடுக்காய் அதுவும் புதிதாய்
கையில் சில விலை கூடிய கனப்பொருள்
கழுத்தில் மின்னும் தங்கக் கடை
இதை ஆழப் பிறந்தவளாச்சே...ஆனால்

உள்நாட்டு காதலனோ --ச்சா
வியர்வை மணம்...எப்போதும் ஒரே கைபேசி
கழுத்தில் வெறும் கருப்பு கயிறு
வெளிநாடு ..ஆஹா ஓஹோ என
கன்னியவள் காதலை உதற
கபட முடிவெடுத்தால்.

காதல் முற்றியது- ஆனால் மீன் சந்தையில்

அவள் உதடு ரீங்காரம்  செய்து பதம் பார்க்க சொல்கிறது
என்னுள்ளத்தில் தேன் சொரிகின்றது
மனசோ மந்திரித்து விட்ட கோழி போல் நடிக்கிறது-இருந்தாலும்
கலாச்சாரம் தடுக்கிறது -ஏனெனில்
அது ஒரு மீன் சந்தை

இதோ நான் -தாயே

மெய் சிலிர்க்க மேனி தழவளாவி
அன்பிழுக்க அதில் ஆழப் புதைந்து
புல்லரிக்க நீ பதமாய் கற்பமுற்று
தந்தைக்கு ஒர் வரம் கொடுதாய் -தாயே
இதோ நான்.