திங்கள், 30 ஏப்ரல், 2018

கனத்ததா உள்ளம்!

பணம் மாற்றும் உள்ளம்
குணம் மாறும் காதல்
கணம் சிந்தை செய்ய
மனம் தேய்ந்து போச்சு

இன மானம் பேசி
இருப்பென்று ஊதி
கன தானம் செய்து
கடந்திட்ட போது

சில நாய்கள் வந்து
பல வாயால் குரைத்து
நலமாக வாலை குறுக்காக ஆட்ட
நிலம் மாறி போச்சு
நிம்மதியும் போச்சு