மெது மெதுவாய்திறக்கும்
பெட்டகமே!
ஏன்
ஒழிந்துகொண்டு வழர்ந்து வந்து
ஒளிதருகிறாய்?
காதல் கைகூட வெட்கமும் நாணமும்
அழிய
முற்றும் திறந்த முனிவராவோமே
அந் நாளில் தான் நீ பௌர்ணமியோ?
அல்லது
முற்றும் திறந்த பின்னர் யாரும் காணா வண்ணம்
முழு இரவில் முத்தெடுப்போமே
அது தானோ அமாவாசை
முகிலிலும் மறைகிறாய்
முற்றாயும் மறைகிறாய்
சில்மிசம் செய்துவிட்டு
கற்பை பதம் பார்க்கும் வடிவமா?
சொல் நிலாவே சொல்@!