ஓ மரங்களே!
ஓ கொடிசெடிகளே!
சொல்லுங்கள்
நறு மணம் வீசியது யார்?
தேனீக்களை அழைத்தது யார்?
பாட்டுக்கு கவி எழுதி
காற்றினில் பறக்கவிட்டது யார்?
கற்பம் தரிக்கும் ஆசையா அல்லது
காமவயப்பட்ட ஆசையா?
தரகு வேலையில்
தேனீக்கள் கெட்டிக்காரர்களா என்ன?
நீங்கள் கொடுப்பது தேனில்லை
அது உங்களுக்கு தெரிந்த பாசை
நாங்கள் என்ன செய்வது
இனிக்கிறதே!
அதனால்
நாக்கை தொங்கப்போடுகிறோம்
உடலுறவுக்கு அழைக்கப்பட்ட
3ஆம் நபர்களா தேனீக்கள்?
இல்லை
வெட்கத்தை மலர்ந்து காட்டி
காற்றால் கதை பேசும்
கலையா நறுமணங்கள்
தேன் எடுக்கும் தேனீக்களை விட
தேனீயை கண்டதும்
உங்கள் நழினங்கள் உளதே
அவை ஏன்?
அப்படி என்ன சுரப்பிக்கால்
இப்படி இனிமையை காட்டி
கற்பிற்காய் காமம் கேட்டு
இரவோ பகலோ ஓய்வின்றி
ஒருமிக்கும் அன்புளதே
நீங்கள் ஓரறிவுக்கூடமல்ல
மனிதனின் பொறாமையால்
அவன் அப்படித்தான் செய்கிறான்
விளங்கிக்கொள்ளுங்கள்
நீங்கள் வெட்டப்படும்போதெல்லாம்
கண்ணீர் சிந்துவது உங்களோடு கூடிய
தேனீக்களும்,சிட்டுக்கலும்
எம் இதய துடிப்பும் தான்
ஆனால் இதயம் வேறாகவும்
மனிதன் வேறாகவும் உளதால்
யார் மனிதன் எனும் வினாவிற்கு
விடை கொடுங்கள் நீங்களே!
Photo by Tuấn Kiệt Jr. from Pexels
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக