எனக்கென நினைத்தேன் வாழ்க்கையை தொலைத்தேன்
பழகிய காலம் -பாழாகிப்போனதே
என்னுறவே!
உன் இனிமையான முற்கோபம் -என்னை
சாறாக பிழிந்த அன்பின் ரூபம்
தாங்குகிறேன் உன்னை என விடுதியில் கூட-உன்
தோளில் சுமந்து காட்டினாயே !!
அதையுமா மறந்தாய் இப்போ?
என் மூக்கை உன் முக்கில் வைத்து
சுவாசித்துக் காட்டினாயே!!
உதட்டை விடியும் வரை ஒட்டியிருப்போம் என
நடுநிசியில் தூங்கினாயே
நான் குழந்தை என்றேன்
அதுவுமா ஞாபகமில்லை??
களவாணிக்காதலாச்சே கற்புக்கு நீ சொன்ன
அர்த்தங்கள் எங்கே-எனை ஏமாற்றவா
விடுதிக்கு விடுதி விடுமுறை போட்டய்??-இதோ உன்
ஆத்துமாவிற்க்குள் பல நிலையில் புதைந்தேன்-நீயும் என்
ஆத்துமாவிற்க்குள் புதைந்திருக்கின்றாய்
பேயாகிக்கூட உன்னுடனே வாழ்வேன்
மறக்காதெ !
துரத்தி வருவேன் உனை-எங்கே
வாழ்ந்து காட்டு பார்க்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக