ஞாயிறு, 7 ஜனவரி, 2018

சொல்லவில்லை ஆனால் காதலித்தேன்!

ஆற்று மணல்கரை அருகிலொரு குடிசை 
வேற்றுக்கிரக வாசியில்லை அவள்!
வெங்கடேசின் மகள்
மாற்று மதமுடையாள் இன்ப இதழுடையாள்
சாற்று மாதுளையில் தனிரகமென்றெண்ணி

கேற்று வாயிலில் - நின்று 
மணிக்கணக்கில் பாத்திருக்கேன்
கோலமிட்டு மெழுகி கோவில் செல்லும் வரை 
பல்துலக்காமலே பச்சோந்தியாய் பசித்திருந்தேன் - ஆனாலும்
சொல்லவில்லை காதலை!

அயல்வீடுகளெல்லாம் அடுக்கடுகாய் ஆண்கள் -குடிகாரன் என்னப்பன்
எனக்கெங்கே கனவுக் கன்னி -அதனாலோ என்னவோ
சொல்ல வெட்கத்தில் சொல்லாமலே தவித்தேன்
சொல்லாத காதலிது செல்லாததென நினைதேன்!

படிப்பில் நான் கெட்டி என்றாலும்- என்கம்மல்
நடிப்பழகியிவள் சிரிப்பொலியில் சிதைந்துவிடும்
செடிகொடிகள் சிலதை சுரண்டி -வடு வைப்பத தவிர
வேறு வழியில்லை எனக்கு-சொல்லாத காதலிது

பல்கலையில் கூட கொடிகட்டிப் பறந்தேன்
ஒருகலையும் செல்லாத இவள்கலையில் மயங்கி
தறுதலையாக கூட வாழ்ந்து பார்த்தேன் - முடியவில்லை
சொல்லாத காதலிது

படர்கொடியொன்று என்னெழுத்தை தாங்கி -அவள் வீட்டில் 
தொடர் கொடியாய் சென்றது -அப்போது கேட்டாள் அவள்
இலையில் வரையும் உங்கள் காதலை - என் 
இதையத்தில் வரையலாமே யென

 சொல்லிவிட்ட - என் 
சொல்லாத காதலிது
செடிக்கு கூட இரக்கம் என்னில் உண்டு-என்ன இந்த
கொடிக்கு கூடவா வராமல் போகும்.!!!?







கருத்துகள் இல்லை: